உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்

பாகூர் :கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 42; காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் சண்முகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இறந்து விட்டார். தற்போது, புவனேஷ்வரி, தனது மாமியார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 16ம் தேதி காலை 10:00 மணி அளவில் புவனேஸ்வரி காய்கறி கடைக்கு சென்று விட்டார். அன்று மாலை 6:00 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெட்ரூமில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை