மேலும் செய்திகள்
திருவிழி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்
13-May-2025
புதுச்சேரி : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.புதுச்சேரி, பாரதி வீதியில் பழமை வாய்ந்த, உலக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் நேற்று காலை நடந்தது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. பின், 108 பால்குடங்களை பெண்கள் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து,அம்மனுக்கு 108 பால் குடங்களில் இருந்து பால் அபிேஷகம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார் மற்றும் நிர்வாகிகள், உபயதாரர் சுந்தர் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் ஹரிஹர குருக்கள், ராகுல் குருக்கள்செய்திருந்தனர்.
13-May-2025