உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை: 11 பேர் அதிரடி கைது

பொது இடத்தில் ரகளை: 11 பேர் அதிரடி கைது

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ஐ.டி.ஐ., சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கருவடிக்குப்பம் அரவிந்தராஜ்,31; என்பவரை கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் நண்பர்கள் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த தவளகுப்பம் ரஞ்சன்,34, என்பவரை கைது செய்தனர். அதேபோல், ரெட்டியார்பாளையம் வில்லியனுார் மெயின் ரோட்டில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் வேல்முருகன்,52; பாலாஜி நகர் மெயின் ரோட்டில் மது போதையில் ரகளை செய்த கதிர்காமம் சூசைராஜ், 40, ஆகியோரை கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கணகசெட்டிக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள மைதானத்தில், மது போதையில் ரகளை செய்த, விக்கிரவாண்டி எல்லப்பன், 47; மரக்காணம் சதிஷ்குமார், 34; ஆகியோரை கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ரோந்து சென்றபோது, அங்கு ரகளை செய்த உப்பளம் ஆண்ட்ரூஸ்,49; என்பவரை கைது செய்தனர். திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அநாகரிமாக நடந்து கொண்ட விழுப்புரம் தருணா,35, என்பவரை கைது செய்தனர். முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் வேல்ராம்பட்டு ஒலந்தை ஏரி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த நெல்லித்தோப்பு சஞ்செய்,20, என்பவரை கைது செய்தனர். அதேபோல் தேங்காய்திட்டு நேரு நகர் மெயின்ரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த தேங்காய்திட்டு ராகுல்,23, என்பவரை கைது செய்தனர். பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் கொம்பரமுக்கு பகுதியில் ரோந்து சென்றபோது, பைபாஸ் சர்வீஸ் சாலையில் மது போதையில் ரகளை செய்த தலசேரி பெருங்காடி ஜிதின்,33, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை