மேலும் செய்திகள்
பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு
28-Nov-2025
புதுச்சேரி: மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் தட்டாஞ்சாவடி சுப்பையா திருமண நிலையம் எதிரே மர்ம நபர்கள் இருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் லாஸ்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 36; கதிர்காமம் ராஜாராமன், 30; என்பது தெரியவந்தது. 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இதேபோல், பிச்சைவீரன்பேட் சேர்ந்த பிறைசூடன், 30; லாஸ்பேட்டை சேர்ந்த பிரகாஷ், 33; முத்தியால்பேட்டை சேர்ந்த முத்துகுமரன், 42; வம்பாகீரப்பாளையம் சேர்ந்த முகமது இம்ரான், 25; கண்டாக்டர் தோட்டம் சேர்ந்த சரந்திரகாந்த், 32; கண்டமங்கலத்தை சேர்ந்த சரண்ராஜ், 31; கணுவாபேட்டை சேர்ந்த பிரபாகரன், 34; நைனார் மண்டபத்தை சேர்ந்த இளவரசன், 23; நெல்லித்தோப்பை சேர்ந்த வெங்கடேஷ், 25; லாஸ்பேட்டை சேர்ந்த யுவராஜ், 43; ஆகிய 10 பேர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
28-Nov-2025