மேலும் செய்திகள்
பணத்தை திருப்பி தராத பெயின்டருக்கு கத்திக்குத்து
03-Apr-2025
புதுச்சேரி: முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.உறுவையாறு ,செல்வா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த், 25; பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த 25ம் தேதி மாலை உறுவையாறு ஏரிக்கரையில் இயற்கை உபாதைக்கு சென்று வீடு திரும்பிய கிருஷ்ணகாந்தை சந்தோஷ், 24, அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 23, ஆகியோர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் இடது கையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். கிருஷ்ணகாந்த் புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோஷ் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.
03-Apr-2025