உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு வெடித்து 2 காட்டேஜ்கள் எரிந்து சேதம்

பட்டாசு வெடித்து 2 காட்டேஜ்கள் எரிந்து சேதம்

புதுச்சேரி: குருசுக்குப்பத்தில் பட்டாசு வெடித்ததில் 2 தனியார் காட்டேஜ்கள் எரிந்து சேதமடைந்தன. குருசுகுப்பம் செயின்ட் பிரான்சிஸ் தெருவில் நேற்று மதியம் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள தனியார் விடுதியின் மேல் அமைக்கப்பட்ட 2 காட்டேஜ் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காட்டேஜில் இருந்த ஏ.சி., பிரிட்ஜ், சோபா, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை