மேலும் செய்திகள்
பல்கலையில்., கருத்தரங்கம்
19-Oct-2025
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எதிர்காலத்தை எழுதும் வரலாற்றை கற்றல் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் பெண்கள் ஆய்வுத்துறை மையம் மற்றும் இந்திய மகளிர் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய பயிற்சி பட்டறைக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி பேசுகையில், 'இந்தியாவில் பெண்கள் ஆய்வுத்துறை, கல்வித் துறையாகவும், சமூக மாற்ற இயக்கமாகவும் வளர்ந்து வருகின்றனர். எஸ்.என்.டி.டி., மகளிர் பல்கலைக்கழகத்தின் நீரா தேசாயின், பெண்கள் ஆய்வுத்துறையின் கல்வி மற்றும் செயற்பாட்டு தளத்தை உருவாக்கிய சிறப்புபடை பண்புகளை பாராட்டினார். நிகழ்ச்சியில், இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் கல்பனா, புதுச்சேரி பல்கலைக் கழக பெண்கள் ஆய்வுத்துறை மையத்தின் இணை பேராசிரியர் மீனா, பேச்சாளர்கள் சுனிதா, சரஸ்வதி, சவுஜன்யா, அருவி, ரேகா, கீதா, செல்வம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், இணைப் பேராசிரியர் ஆசிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Oct-2025