உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்களை மிரட்டிய 2 பேர் கைது

மக்களை மிரட்டிய 2 பேர் கைது

புதுச்சேரி; புதுச்சேரி, பிரியதர்ஷினி நகர், கே.டி.தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ஓதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24; என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல், கூடப்பாக்கம் பகுதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய செல்லிப்பட்டை சேர்ந்த சக்திவேல், 25; என்பவரை வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை