மேலும் செய்திகள்
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4.39 லட்சம் இழப்பு
30-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 பேர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ரூ.10.38 லட்சம் ஏமாந்துள்ளனர். கதிர்காமத்தை சேர்ந்தவர் வினோதன், 19. இவரை, இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் வர்த்தகத்தில் முதலீடு செய்து இரடிப்பு லாபம் பெறலாம் என, கூறினார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த சச்சிதானந்தம்,30, என்பவர்,பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Aug-2025