உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  2 பேரிடம் ரூ.72 ஆயிரம் மோசடி

 2 பேரிடம் ரூ.72 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 72 ஆயிரம் இழந்துள்ளனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தே பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 66 ஆயிரம் முதலீடு செய்தார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதேபோல், முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் இன்ஸ்டகிராம் மூலம் துணி ஆர்டர் செய்து ரூ. 6 ஆயிரத்து 498 என, 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 72 ஆயிரத்து 498 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை