மேலும் செய்திகள்
நாய் கடித்து 17 பேர் 'அட்மிட்'
11-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில், டெங்குவால், 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில், கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு, இன்புளூயன்சா, டைபாய்டு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், புதுச்சேரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த, 23 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலட்சியம் காரணமாக, டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
11-Sep-2024