தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2,388 மது பாட்டில்கள் பறிமுதல்
நாமக்கல் வாலிபர் கைதுபுதுச்சேரி, ஜன. 11-புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்கு கடத்த முயன்ற நாமக்கல் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை காருடன் பறிமுதல் செய்தனர்.உருளையன்பேட்டை போலீஸ் ஏட்டு முனுசாமி, செந்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை (டி.என்.30.ஜெ.4116) சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், புதுவளவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 33; புதுச்சேரி மதுபானங்களை தமிழகத்திற்கு கடத்தி செல்ல வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.சுரேைஷ போலீசார் கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர்.