பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து மழை அவ்வப் போது பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு: பத்தக்கண்ணு 26 மி.மீ., திருக்கனுார் 22; புதுச்சேரி 19; லாஸ்பேட்டை 11.9; பாகூர் 11 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.