உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் 3 நாள் சர்வதேச மாநாடு

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் 3 நாள் சர்வதேச மாநாடு

புதுச்சேரி: பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. மரக்காணம் அருகே பொம்மையார்பாளையம் பகுதியில், ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியும், எஸ்.கே.ஆர்.ஜி., அகாடமியும் இணைந்து, மேம்பட்ட நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வேதச மாநாடு நடைபெற்றது. கல்லுாரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் ரதிதேவி வரவேற்றார். இந்த மாநாடு கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை வழங்கினர். மாநாடு முடிவில், பங்கேற்ற அனைவருக்கும் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. கணினி பண்பாட்டு துறை தலைவர் பிரியங்கா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை