மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
15 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
15 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
15 hour(s) ago
வில்லியனுார் : வில்லியனுாரை சேர்ந்தவர் பாலமுருகன், 40; பைபாஸ் கண்ணகி பள்ளி அருகே பேக்கரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பேக்கரியை மூடிவிட்டு பணத்தை உள்ளேயே வைத்துவிட்டு சென்றார்.நேற்று காலை 6:00 மணியளவில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஊழியர்களுக்கு சம்பளம் போட வைத்திருந்த பணம் மற்றும் கடை வசூல் பணம் என, 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.அவர், வில்லியனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கடையில் இருந்த சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், பைக்கில் வந்து, கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வைத்திருந்த பெட்டியை உடைத்து, அதில் இருந்த பணத்தை மூட்டைக்கட்டி துாக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.அதே போல், வில்லியனுார் மெயின்ரோடு, மூப்பனார் காம்ப்ளக்சில் புதுச்சேரியை சேர்ந்த சேகர் என்பவர் நடத்தி வரும் காபி ஷாப் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த 95 ஆயிரம் ரொக்கம் மற்றும் அதன் அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப்பின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் அதே முகமூடி அணிந்த நபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago