உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி ; லாஸ்பேட்டையில் பைக் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெசவாளர் வீதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரது பல்சர் பைக் கடந்த 14ம் தேதி திருடு போனது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில், மடக்கி விசாரித்தனர். அவர்கள் வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.விசாரணையில், முதலியார்பேட்டை, அனிதா நகர் சிவக்குமார், 21; வாணரப்பேட், ஆலன் வீதி சஞ்சய், 21; திருபுவனைபாளையம், பாரதிதாசன் வீதி ரியாஸ் அகமது, 21, ஆகியோர் என, தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை