உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மினி லாரி மோதி 30 ஆடுகள் பலி

மினி லாரி மோதி 30 ஆடுகள் பலி

ராமநத்தம் : ராமநத்தம் அருகே மினி லாரி மோதி 30 ஆடுகள் இறந்தன.ராமநாதபுரம் மாவட்டம், அரியங்குடியை சேர்ந்தவர் முருகேசன், 45. இவர், தனக்கு சொந்தமான ஆடுகளை வட மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து, கிடை அமைத்து வருவாய் ஈட்டி வந்தார். நேற்று அதிகாலை 6:00 மணியளவில், ராமநத்தம் - கொரக்கவாடி சாலையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது, அவ்வழியே பின்னால் வந்த மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், 30 ஆடுகள் அதே இடத்தில் இறந்தன. ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை