உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு வெடித்து 30 பேர் காயம்

பட்டாசு வெடித்து 30 பேர் காயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பட்டாசு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தீபாவளி தினமான நேற்று முன்தினம் காலை, மாலை இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் காலை நேரத்தை விட மாலை 6:00 மணிக்கு மேல் அதிக பட்டாசுகள் புதுச்சேரியில் வெடிக்கப்பட்டன. பட்டாசு வெடித்தபோது ஏழு வயது சிறுவர்கள் தொடங்கி, முதியவர் வரை 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ராமோஜிராவ், சேரன் ஆகியோர் மெரினா கடற்கரை சென்றபோது அங்கு ரோட்டில் வெடித்த வெடி சிதறி காயமடைந்தனர். இதேபோல் தினேஷ்குமார் என்பவர் பைக்கில், செல்லும்போது வெடி விழுந்து கைகளில் காயம் அடைந்தார். சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கை பையில் வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து வலது கையில் இரண்டு விரல்கள் சிதறி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதியவர் ஒருவர் பட்டாசு வெடித்து கண் பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடிக்கு காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி