உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடியை கொலை செய்ய விரட்டி சென்ற 4 பேர் கைது

ரவுடியை கொலை செய்ய விரட்டி சென்ற 4 பேர் கைது

புதுச்சேரி : முதலியார்பேட்டை அருகே ரவுடியை கொலை செய்ய விரட்டி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 24; கோவிந்த சாலையை சேர்ந்தவர் லோகபிரகாஷ், 24. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறது. இருவரும் ஒருவரை, ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.இந்நிலையில், மணிகண்டன், நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக, சிறைக்கு சென்று, கடந்த 10 தினங்களுக்கு முன், ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் கொம்பாக்கம் பேட் அருகே மணிகண்டன் பைக்கில் சென்றார்.அப்போது, லோக பிரகாஷின் ஆதரவாளர்கள் கோவிந்த சாலையை சேர்ந்த சஞ்சை, 24, சந்துாரு, 20, காரமணிக் குப்பத்தை சேர்ந்த தனுஷ், 22, குருபிரசாத், 19, ஆகிய நான்கு பேரும் பைக்கில் கத்தியுடன் சென்று மணிகண்டனை கொலை செய்ய விரட்டினர்.தகவலறிந்த முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார், சஞ்சை உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்தி, 2 பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை