மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
22-Aug-2025
அரியாங்குப்பம்: பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் விடுதியில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு பணம் வைத்து சூதாடிய தவளக்குப்பம் ராஜா,40; ஜீவா, 35; வெங்கடேசன், 38; ரெட்டியார்பாளையம் வேல்முருகன்,32; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,500 ரொக்கம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து ராஜா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
22-Aug-2025