உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 4 பேர் கைது

இடத்தில் ரகளை 4 பேர் கைது

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சின்ன ஆராய்ச்சிக்குப்பம் தனியார் கம்பெனி அருகே ஆபாசமாக பேசிய படி, ரகளையில் ஈடுபட்ட கோண்டூர் பகுதியை சேர்ந்த தெய்வமணி 51; என்பவரை கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீசார் மணமேடு ஏரிக்கரை ஐயனார் கோவில் அருகே ரகளை செய்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜெயகுமார் 29; என்பவரை கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த தினேஷ் 21; தேவனாம்பட்டினத்தை சேர்ந்த திருஞானம் 61; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை