உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் குற்றவாளிகளிடம் 4 பேர் ரூ.1.31 லட்சம் இழப்பு

சைபர் குற்றவாளிகளிடம் 4 பேர் ரூ.1.31 லட்சம் இழப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பலிடம் 4 பேர் ரூ.1.31 லட்சம் இழந்துள்ளனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய அப்பெண் ரூ. 49 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். வேல்ராம்பேட்டை சேர்ந்த ஆண் நபருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது. அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.34 ஆயிரத்து 999 எடுத்துள்ளனர். இதேபோல், கொம்பாக்கத்தை சேர்ந்த ஆண் நபர் 21 ஆயிரத்து 500, உப்பளத்தை சேர்ந்த பெண் 25 ஆயிரத்து 825 என 4 பேர் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 324 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை