6 பேரிடம் ரூ. 10.15 லட்சம் அபேஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில், ஆறு பேரிடம் 10.15 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, தமிழ்மதி நகரை சேர்ந்தவர் சந்திராபாலன். இவரை தொடர்பு கொண்ட நபர், தன்னை சைபர் கிரைம் அதிகாரி என கூறினார். தொடர்ந்து, உங்களுக்கு சட்ட விரோதமாக பார்சல் வந்துள்ளது. இது தொடர்பாக, ஸ்கைப் வீடியோ மூலம் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பணம் அனுப்ப வேண்டும் என, மிரட்டினார். அதற்கு பயந்து அவர், 2.5 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.நெல்லித்தோப்பை சேர்ந்தவர் கலைவாணி. இவர், மர்ம நபரிடம் 1 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். மடுகரையை சேர்ந்தவர் இர்ஷாத். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர் 3.20 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.புதுச்சேரி, மோகன் நகரை சேர்ந்தவர் சுகன்யா என்பவர், 1.85 லட்சம் ரூபாயும், உழவர்கரை சேர்ந்த உமாசங்கர், 1.05 லட்சம் ரூபாயும், காரைக்காலை சேர்ந்த முகமது இஸ்மாயில், 1 லட்சம் ரூபாயை அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்தனர்.இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.