உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.4.12 லட்சம் இழப்பு

மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.4.12 லட்சம் இழப்பு

புதுச்சேரி: காலாப்பட்டைச் சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான, வாட்ஸ் ஆப் குரூப்பில் அவரை இணைத்துள்ளார். அதில், பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர் மர்மநபர் தெரிவித்த பங்குச்சந்தையில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், செல்லிப்பட்டை சேர்ந்த பெண் ஒருவர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். காரைக்காலை சேர்ந்த ஆண் நபர் 20 ஆயிரத்து 789, உருளையன்பேட்டை சேர்ந்த பெண் 31 ஆயிரத்து 500, மடுகரையை சேர்ந்த பெண் 2 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் 2 ஆயிரத்து 990 என மொத்தம் 6 பேர் 4 லட்சத்து 12 ஆயிரத்து 279 ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !