தகராறு செய்த 6 பேர் கைது
புதுச்சேரி,: புதுச்சேரியில், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை, காமராஜர் மணி மண்டபம் பகுதியில் லாஸ்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் தகராறில் ஈடுபட்ட கோட்டக்குப்பம் பத்பநாபன், 22, என்பவரை கைது செய்தனர்.அதே போல், இ.சி.ஆர்., சாலை மடுவுபேட் அருகே பொதுமக்களிடம் தகராறு செய்த, முத்தியால்பேட்டை கந்தன், 25; என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் பகுதியில் போதையில் பொது மக்களிடம் தகராறு செய்த சங்கர், 34; தட்டாஞ்சாவடி பகுதியில் தகராறு செய்த, விஜயகுமார், 33, ஆகியோரை டி. நகர் போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட உழவர்கரை சார்லஸ், 45; முத்திரப்பாளையம் வேல், 40; ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீ சார் கைது செய்தனர்.