உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ.3.97 லட்சம் மோசடி 

6 பேரிடம் ரூ.3.97 லட்சம் மோசடி 

புதுச்சேரி, ஜூன் 29-புதுச்சேரியில் 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.3.97 லட்சம் இழந்துள்ளனர்.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, அப்பெண் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.வில்லியனுாரை சேர்ந்த நபர், தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கிற்கு 96 ஆயிரம் ரூபாய் அனுப்பி இழந்தார்.இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த நபர் 41 ஆயிரத்து 900, சாரத்தை சேர்ந்த நபர் 13 ஆயிரம், சண்முகாபுரத்தை சேர்ந்த நபர் 16 ஆயிரத்து 550, லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 16 ஆயிரத்து 500 என, 6 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபாய் ஏமாந்தனர்.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை