| ADDED : நவ 16, 2025 04:07 AM
புதுச்சேரி: சைபர் மோசடி கும்பலிடம் புதுச்சேரியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் ரூ.1.22 லட்சம் இழந்துள்ளனர். தட்டாஞ்சாவடியை சேர்ந்த பெண்ணை, தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரபல வங்கியின் அதிகாரி போல் பேசியுள்ளார். அதைநம்பி, தனது கிரெட்டி கார்டு விவரங்கள், ஓ.டி.பி., எண்ணை தெரிவித்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது கிரெட்டி கார்டில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர். இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 27 ஆயிரத்து 500, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 19 ஆயிரத்து 680, நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 356, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 9 ஆயிரத்து 797, உப்பளத்தை சேர்ந்த பெண் 5 ஆயிரம், குருசுக்குப்பத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 550 என 7 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 883 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.