மேலும் செய்திகள்
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
29-Aug-2024
புதுச்சேரி : குபேர் மார்க்கெட்டில் நடந்த மெகா துாய்மை பணியில் 7.70 டன் குப்பைகளை சேகரித்து தரம்பிரித்து அகற்றப்பட்டது.புதுச்சேரி நகராட்சி சார்பில் குபேர் மார்க்கெட் கடை வீதிகளில் மெகா துாய்மை பணி நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கினார்.நேரு எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துாய்மை பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த துாய்மை பணியில், குபேர் மார்க்கெட் கடை வீதிகளில் பரவி கிடந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 7.70 டன் குப்பைகள் சேகரித்து, தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டன.முகாமில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், சுகாதார அதிகாரி ஆர்த்தி, வருவாய் பிரிவு-2 அதிகாரி பிரபாகர், வருவாய் பிரிவு-1 அதிகாரி சதாசிவம், உதவி பொறியாளர்கள் பழனிராஜா, நமச்சிவாயம், வெங்கடாசலபதி, யுவராஜ் கலந்து கொண்டனர்.
29-Aug-2024