உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  8 பேரிடம் ரூ.1.92 லட்சம் மோசடி

 8 பேரிடம் ரூ.1.92 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.92 லட்சம் இழந்துள்ளனர். சாரத்தை சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதேபோல், தவளக்குப்பத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரம், சாரத்தை சேர்ந்த பெண் 16 ஆயிரத்து 330, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 8 ஆயிரத்து 750, பாகூரைச் சேர்ந்தவர் 5 ஆயிரம், காலாப்பட்டை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 745, புதுக்குப்பத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரம், உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 500 எ ன, 8 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரத்து 825 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்