தீயணைப்பு வாகனம் மோதி ஒரு கார், 6 பைக்குகள் சேதம்
புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு வாகனம் மோதி ஒரு கார், 6 பைக்குள் சேதமடைந்தன. புதுச்சேரி, முத்தியால் பேட்டை கால்வாயில் ஒருவர் விழுந்து விட்ட தாக புதுச்சேரி தீய ணைப்பு துறையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரை மீட்க புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனம் எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக செல்லும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து எதிரில் சென்ற கார் மீது மோதியது. இந்த கார் சாலையின் சென்ற 6 பைக்குகள் மீது மோதி நின்றது. இதில் ஒரு பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.