உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: டி நகர் பகுதியில் போலீசார் நேற்று (நவ.,14) கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் வசந்தசாமி,33; நாவற்குளம் நரேஷ்,28; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். அதே போல் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார், கழுப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார்,39; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முத்தியால்பேட்டை போலீசார் நேற்று பெருமாள் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ