உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது போதையில் ரகளை 8 பேர் மீது வழக்கு பதிவு

மது போதையில் ரகளை 8 பேர் மீது வழக்கு பதிவு

சேதராப்பட்டு போலீசார் நேற்றுமுன்தினம் மயிலம் மெயின் ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்குதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார் ஒட்டை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்,31; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் அய்யனார் கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் ரகளை செய்த தர்மாபுரி மரியஆனந்த்,36; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, பூமியான்பேட்டை சிவக்குமார்,43 என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல், மூலகுளம் தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளை செய்த, ரெட்டியார்பாளையம் ஜான்சன் மோரன்,42; மேரி உழவர்கரை தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளை செய்த லாஸ்பேட்டை முரளி,42; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பெரியகடை போலீசார் நேற்று முன்தினம் அண்ணா சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் மது போதையில் ரகளை செய்த ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் திவாகர்,25; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கணகசெட்டிக்குளம் இ.சி.ஆரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த அனுமந்தை பகுதியை சேர்ந்த ராமூர்த்தி,50; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் சுப்பையா நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் பார் எதிரே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட குறிஞ்சிப்பாடி கிருஷ்ணமூர்த்தி மகன் சுஜித்,23; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !