கட்டுமான பொருட்கள் குவித்தால் புகார் தெரிவிக்கலாம்
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது நகராட்சியை அணுக வேண்டும். அதற்கான கட்டணத்தை செலுத்தி அனுமதி பெற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும். பல கட்டுமானங்கள் தக்க அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படுவது நகராட்சியின் கவனத்திற்கு வந்துள்ளது.எனவே முறைப்படுத்தி தக்க கட்டணம் வசூலிக்கவும் போக்குவரத்தது இடையூறு ஏற்படுவதை தடுக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கட்டுமான பொருட்களை குவித்து வைத்து இருந்தால் 75981-71674 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.