உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகு குழாமில் மக்கள் கூட்டம்

படகு குழாமில் மக்கள் கூட்டம்

அரியாங்குப்பம், : புதுச்சேரிக்கு வார விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் நகரப் பகுதியில் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குடியரசு தின விழா மற்றும் சனி, ஞாயிறு என, தொடர் விடுமுறையால், கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.படகு குழாமில் உள்ள கார் பார்ங்கில், கார்களை விடுவதற்கு இடம் இல்லாமல் இருந்ததால், நோணாங்குப்பம் பழைய சுண்ணாம்பு ஆறு பாலத்தில் கார்கள் வரிசையாக அணிவகுத்திருந்தன. இதனால் கடலுார் சாலை நோணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ