உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாட்டிலால் குத்திய நபருக்கு வலை

பாட்டிலால் குத்திய நபருக்கு வலை

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பேட் பகுதியை சேர்ந்தவர் முத்தையன், 48. இவர், கடந்த 7ம் தேதி, சிவனார்புரம் வழியாக சென்றார். அவரை, பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆதவன், வழிமறித்து மது வாங்கி தர வேண்டும் இல்லை எனில் கொலை செய்து விடுவேன் என, மிரட்டல் விடுத்து, அவர் வைத்திருந்த பாட்டிலால், குத்தினார்.காயமடைந்த முத்தையன் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர், அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆதவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை