மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
நெட்டப்பாக்கம் : ஏரிப்பாக்கம் துணை மின்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெட்டப்பாக்கம் வேல்முருகன் நகர், என்.ஏ.பி., கார்டன், லட்சுமி நகர், நேரு நகர் விரிவு பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணி முதல் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவு ஒரு மணி வரை மின்சாரம் வினியோகம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு 1.00 மணியளவில் ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதையடுத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின் வினியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் மின்தடை ஏற்படுவது தொடர்பாக புகார் அளித்தனர். மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago