உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குஜராத்தை சேர்ந்தவர் புதுச்சேரியில் சாவு

குஜராத்தை சேர்ந்தவர் புதுச்சேரியில் சாவு

புதுச்சேரி: நண்பர்களுடன் புதுச்சேரி வந்த வட மாநில தனியார் கம்பெனி மேலாளர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரி த்து வருகின்றனர். குஜராத், வதோராவை சேர்ந்தவர் படேல் கேவல் நரேந்திர பாய், 33; தனியார் கம்பெனி மேலாளர். வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்திருந்த படேல் கேவல், வேலை முடிந்தபின், தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு கடந்த 25ம் தேதி வந்தார். ரெயின்போ நகரில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்த படேல் கேவல், அன்று இரவு 11:00 மணிக்கு மொபைலில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அவரது நண்பர்கள் படேல் கேவலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மனைவி படேல் விருஷாலி கேவல் புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை