உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு

சாலையில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு

புதுச்சேரி : குருசுக்குப்பம் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக்குப்பம் பட்டேல் சாலையும், அம்பேத்கர் சாலையும் சந்திக்கும் சாலை அருகே நேற்று காலை 10:00 மணிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் பள்ளம் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்.பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, கேட்டறிந்தார். அதில், சாலையின் குறுக்கே கழிவுநீர் குழாய் கடலுக்கு செல்கிறது. சாலையில் மேற்பரப்பில் அரிப்பு ஏற்பட்டதால், பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை