உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் ரூ. 41 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ. 41 லட்சம் மோசடி

புதுச்சேரி : பெண்ணிடம் 41 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் கிரிஜா, 53. இவர் பங்கு வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், இவரது வாட்ஸ் ஆப்பில் வீட்டிலிருந்து நிறைய சம்பாதிக்கலாம் என வந்த தகவலை நம்பி,பல்வேறு வங்கி கணக்குகளில் 41 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமார்ந்தார். இது குறித்து அவர், அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ