உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்விசார் செயல் தளத்தை மேம்படுத்த பள்ளி கல்வி இயக்ககம் மூலம் நமது வகுப்பறைகளில் புத்தாக்க திறனை வளர்த்தெடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பயிலரங்கில் 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 120 ஆசிரியர்கள் நேரடியாகவும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் காணொலி மூலமாகவும் பங்கேற்றனர். இணை இயக்குநர் சிவகாமி பயிலரங்கை துவக்கி வைத்தார். ஏ.ஐ.டி., செயலாக்க இயக்குநர் சுந்தரமூர்த்தி, தலைமை செயலாக்க அதிகாரி விஷ்ணு வரதன் மற்றும் தி லேர்னர்ஸ் கான்ஃபிளுயன்ஸ் அமைப்பு இணை நிறுவனர் செந்தில் குமரன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயற்சி அளித்தனர். பயிலரங்க அமர்வுகளில் கிடைத்த சிறப்பான கற்றல் குறித்து ஆசிரியர்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பயிலரங்கில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், இணை இயக்குநர் சிவகாமி கூறுகையில், நமது ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் புத்தாக்கத்தை வளர்த்து உருவாக்குவதற்கு அவசியமான கருவிகளையும், வழிமுறைகளையும் பயிலரங்கம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ