உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹாக்கி போட்டியில் ஆச்சார்யா கல்லுாரி முதலிடம்

ஹாக்கி போட்டியில் ஆச்சார்யா கல்லுாரி முதலிடம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி சார்பில் ஆண்கள் ஹாக்கி போட்டி, வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 15 கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் இளையராஜா, துணை இயக்குநர் பிரவீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பல்கலைக்கழக உடற்கல்வி இணை பேராசிரியர் திருமுருகன் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தது.ஹாக்கி போட்டியில் ஆச்சார்யா கலை அறிவியல் கல்லுாரி முதலிடம் பிடித்தது. ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி 2வது இடம், மதகடிப்பட்டு காமராஜர் கலை கல்லுாரி 3ம் இடம் பிடித்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் குமசேரன், துணை இயக்குநர் பாலாஜி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை