மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
30-Aug-2024
புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வரும் அக்., மாதம் ஒவ்வொரு தொகுதியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, புதுச்சேரியில் அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபடுவது, ரசாயன மற்றும் மதுபான கம்பெனிகளால் நிலத்தடி நீர் முழுமையாக மாசு அடைந்து, மாநிலத்தின் 60 சதவீத இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.சுத்தமான தண்ணீர் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசு புறம்போக்கு, கோவில் நிலங்கள் ஆட்சியாளர்கள் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுகிறது. கவர்னர் பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புற்றீசல் போல் முளைத்துள்ள ரெஸ்டோ பார்களால் மது, மாது, நடனம் என சமூக சமுதாய சீர்குலைவு ஏற்படுகிறது.இதில், கவர்னர் தலையிட்டு நடவடிகை எடுக்க வேண்டும். ரேஷன் கடை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டெங்கு, மலேரியா காய்ச்சல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டித்தல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், துணை தலைவர் ராஜராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா, இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Aug-2024