வதந்தியை பரப்பினால் நடவடிக்கை
புதுச்சேரி: உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராணி எச்சரித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி,தேர்வு எழுத ஹால் டிக்கெட் தராமல், மாணவிகளை அலைக் கழிப்பதாகவும், இக்கல்லாரியில் காமராஜர் கல்வி திட்டம் பொருந்தாது என,சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறியிருப்பது முற்றிலும் தவறு.மாணவிகள் கடந்த 23,ம் தேதி முதல் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதி வருகின்றனர். இனிவரும் காலங்களில், இதுபோன்று உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு, கல்லுாரி மற்றும் அரசுக்கும் அவப் பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிக்கட்டணம் அரசு விதித்துள்ள விதிமுறைப்படி, சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையின் படி மட்டுமே பெறப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.