உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அக்னி வித்யா கேந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

அக்னி வித்யா கேந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

திருக்கனுார்:காட்டேரிகுப்பம் அக்னி வித்யா கேந்திரா பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் தேர்வு எழுதிய 14 மாணவர்களும் மாநில அளவில் உயர் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவி சுஜிதா விஜயன் 490 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி இந்துஜா 486 பெற்று 2ம் இடம், கிஷோர் மற்றும் வைத்தீஸ்வரி 481 பெற்று 3ம் இடம் பிடித்தனர்.பாடவாரியாக தமிழில் வைத்தீஸ்வரி 96, ஆங்கிலத்தில் கிேஷார் 99, கணிதத்தில் சுஜிதா விஜயன் 99, அறிவியலில் குணஸ்ரீ, சுஜிதா விஜயன், இந்துஜா ஆகிய 3 பேரும், சமூக அறிவியலில் குணஸ்ரீ, ருபினா, வைத்தீஸ்வரி, சுஜிதா விஜயன் ஆகிய 4 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில் 98 சதவீதத்திற்கு மேல் ஒருவரும், 90க்கு மேல் 9 பேரும், 80க்கு மேல் 3 பேரும், 75க்கு மேல் ஒருவரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளியின் நிர்வாகி பாஸ்கர் மற்றும் பள்ளியின் முதல்வர் வனிதா பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.மேலும், சாதனைக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக நிர்வாகி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை