உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்

 அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்

புதுச்சேரி: அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸ் துறை சம்பள கணக்குகளுக்காக, ஸ்டேட் பாங்குடன், புதுச்சேரி அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தலைமைச் செயலர் ஷரத் சவுகான், ஸ்டேட் பாங்கின் சென்னை வட்டாரத் தலைமை அலுவலக பொதுமேலாளர் ஹரிதா பூர்ணிமா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இணைச் செயலர் (நிதி) ரத்னா கோஷ் கிஷோர், கருவூலத்துறை இயக்குநர் ஷேக் மொய்தீன், துணைப் பொதுமேலாளர்கள் பாலானந்த், ஸ்மிதா எஸ். நாயர், புதுச்சேரி மண்டல மேலாளர் நடராஜன், புதுச்சேரி கிளையின் உதவிப் பொதுமேலாளர் அன்புமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மண்டல மேலாளர் நடராஜன், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களும் பயனடைந்திடும் வகையில் அறிவுறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். ஸ்டேட் பாங்கில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ. 1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் மற்றும் ரூ. 10 லட்சம் உயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இலவசமாக வழங்குகிறது. மேலும் புதிதாக சம்பளக் கணக்கு துவங்குபவர்களுக்கும் இச்சலுகைகள் பொருந்தும். மேலும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன், குடும்ப சேமிப்புக் கணக்கு எஸ்.பி.ஐ., ரிஷ்டே ஆகியவற்றுக்கான செயலாக்க கட்டணங்களில் சலுகை வழங்கப்படுகிறது. குடும்பத்திற்கு அதிகபட்சம் 4 நபர்களுக்கு (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் முதன்மை மேலாளர்கள் நந்தினி, பாலசுப்ரமணியண், ஹரிஷ், பார்த்தசாரதி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி