உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேளாண் வணிக மேம்பாடு பயிற்சி

 வேளாண் வணிக மேம்பாடு பயிற்சி

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண் வணிக மேம்பாடு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மதகடிப்பட்டு துணை இயக்குநர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி பாக்கியவதி விவசாய குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தனியார் நிறுவன மேலாளர் ரவி வேளாண் புதிய தொழில்நுட்பங்கள், வணிக மேம்பாடு குறித்தும், விவசாயி தினேஷ்குமார், காளாண் வளர்ப்பு மற்றும் வேளாண் இயந்திரமாக்குதல் குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில், திருக்கனுார், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சோம்பட்டு, மணலிப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் தங்கத்துரை, திருமுருகன் செய்திருந்தார். ஆத்மா திட்ட வட்டார மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை