உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்

வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேளாண்துறை மூலம் 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வலியுறுத்தலின்படி, 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' எனும் வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிகழ்ச்சி 29ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடக்கிறது. பிரசார இயக்கத்தில் வரும் சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. அதன்படி, காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த வேளாண் வளர்ச்சி பிரசார இயக்க நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலகம் வெங்கடாசலம் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஸ்ரீவித்யா கலந்து கொண்டு, பயிர் மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கால்நடை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை, குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை