உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆடம்பர தேர்பவனியை முன்னிட்டு அ.தி.மு.க., இனிப்பு வழங்கல்

ஆடம்பர தேர்பவனியை முன்னிட்டு அ.தி.மு.க., இனிப்பு வழங்கல்

புதுச்சேரி: புனித ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர்பவனி சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு கேக், இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் அடங்கிய தொகுப்பினை அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா, தொகுதி தலைவர் ராஜேந்திரன், ஜெ., பேரவை இணை செயலாளர் ஜீவா, தொகுதி துணை செயலாளர் சிவா, வார்டு செயலாளர் ஜெயக்குமார், பாலு மாவட்ட பிரதிநிதி குமரன், வார்டு துணைச் செயலாளர் அன்பு, எம்.ஜி.ஆர்., மன்ற தொகுதி செயலாளர் சரவணன், செல்வம்,வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி