உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலையத்தை திறக்கக் கோரி அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

பஸ் நிலையத்தை திறக்கக் கோரி அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய பஸ் நிலைய வாயில் முன், நேற்று காலை 10:30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜாராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா, ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 29.55 கோடியில் பஸ் நிலயத்தை விரிவாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. விரிவாக்கம் என்ற பெயரில் வணிக வளாகத்தை அரசு கட்டியுள்ளது. பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிந்து, கடந்த மாதம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராவில்லை. கூடுதல் கடைகள் கட்டப்பட்டுள்ளதால், பிரித்து கொடுப்பதில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது.அனைத்து கடைகளையும் டெண்டர் மூலம் விட நீதிமன்றம் தலையிட வேண்டும். தற்காலிக பஸ் நிலையத்தில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். உரிய காலத்தில், பஸ் நிலையம் திறக்கப்படாததால், பூஜை போட்ட ரயில்வே மேம்பால பணிகள் தடைப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி