மேலும் செய்திகள்
போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
5 hour(s) ago
கஞ்சா விற்ற 2 பேர் கைது
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாவட்ட அளவிலான மாணவர்களுக்கிடையே மாரத்தான் போட்டி நடந்தது. புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகத்தின் கீழ் உள்ள புதுச்சேரி எய்ட்ஸ் கடடுப்பாட்டு சங்கம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து புதுச்சேரியில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த ரெட் ரிப்பான் கிளப் மூலம் கல்லுாரி அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 கிலோ மீட்டர் ஓட்டப்போட்டி, காந்தி சிலையில் இருந்து துவங்கி ரயில் நிலையம் அண்ணா சதுக்கம், அண்ணா சாலை வழியாக அஜந்தா சிக்னல் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தது.
5 hour(s) ago
5 hour(s) ago